/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டை ஒன்றிய கூட்டம் அதிகாரிகள் வராததால் அதிருப்தி
/
சாக்கோட்டை ஒன்றிய கூட்டம் அதிகாரிகள் வராததால் அதிருப்தி
சாக்கோட்டை ஒன்றிய கூட்டம் அதிகாரிகள் வராததால் அதிருப்தி
சாக்கோட்டை ஒன்றிய கூட்டம் அதிகாரிகள் வராததால் அதிருப்தி
ADDED : அக் 19, 2024 05:40 AM

காரைக்குடி : சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில், மின்வாரியம் வனத்துறை உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர்கள் புகார்களை தெரிவிக்க முடியாமல் அதிருப்தியடைந்தனர்.
சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. சேர்மன் சரண்யா, தலைமையேற்றார்.
ஆணையாளர் சுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். இதில் மின்வாரியத்துறை, வனத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள முடியாததால் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க முடியாமல் புலம்பினர்.
1வது வார்டு கவுன்சிலர் ராமச்சந்திரன்: தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மின் துண்டிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. கொத்தமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10வது வார்டு கவுன்சிலர் தேவி மீனாள்: 15ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பூஜையுடன் தொடங்கியது. பூஜை நடந்ததோடு சரி பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.
பலமுறை மனு அளித்தும் வேலை நடைபெறவில்லை. கழிவு நீர் மின்மோட்டார் மூலம் அகற்றப்படுகிறது. நிரந்தரமாக கால்வாய் அமைத்து சாக்கடையை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.