/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ம.கோவில்பட்டி கோயில் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படாததால் அதிருப்தி

ADDED : அக் 29, 2024 05:18 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஓடும் பாலாற்றில் தண்ணீர் வரும்போது, கால்வாய்கள் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வரத்துக்கால்வாய்கள் உள்ளன.
தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் வரும் நிலையில் அருகே உள்ள மட்டிக்கண்மாய், காளாப்பூர் ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மறுகால் பாய்ந்து வருகின்றன.
வேங்கைப்பட்டி ரோட்டில் ம.கோவில்பட்டியில் உள்ள கோயில் கண்மாய்க்கு பாலாற்றில் இருந்து வரத்துகால்வாய் இருந்தும் அதில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கண்மாயில் பெய்த மழைநீர் மட்டுமே தேங்கிக்கிடக்கிறது.
கண்மாயில் ஆக்கிரமிப்பு பெருகிவரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே கால்வாயில் தண்ணீர் திறக்காமல் அடைத்து வைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே ஆக்கிரமிப்புகளை தடுத்து கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்என்ற எதிர்பார்ப்பு உள்ளது.