/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாமதமாகும் குடிநீர் திட்டப்பணிகள் அதிகரிக்கும் செலவால் அதிருப்தி
/
தாமதமாகும் குடிநீர் திட்டப்பணிகள் அதிகரிக்கும் செலவால் அதிருப்தி
தாமதமாகும் குடிநீர் திட்டப்பணிகள் அதிகரிக்கும் செலவால் அதிருப்தி
தாமதமாகும் குடிநீர் திட்டப்பணிகள் அதிகரிக்கும் செலவால் அதிருப்தி
ADDED : ஆக 12, 2025 05:50 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே சிராவயலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நபார்டு, நிடா நிதியுதவி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
கல்லல் ஒன்றியம் சிராவயலில் தரை மட்டத்தொட்டி,நீரேற்றும் நிலையம், 3.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. தொட்டியில் இருந்து கல்லல் ஒன்றிய கிராமங் களுக்கு குடிநீர் விநி யோகம் செய்ய உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கலெக்டர் பொற்கொடி தலைமையில் சட்டசபை அரசு உறுதிமொழிக் குழுவினர் இத்திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.
குழுவின் தலைவர் பேசுகையில், பயன்பாட்டுக்கே வராத நிலையில் திட்டத்திற்கான கட்டடங்கள் பழைய கட்டடம் போல் ஆகி விட்டது. பூச்சும் சரியில்லை. திட்டப்பணி தாமதமானதால் ரூ 1752.73 கோடி மதிப்பிலான இத்திட்டம் ரூ 2119.33 கோடியாக உயர்ந்து மக்களின் வரிப் பணம் வீணாகிறது என்றார்.