/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு 81 இடங்களில் மறுவாழ்வு மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
/
வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு 81 இடங்களில் மறுவாழ்வு மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு 81 இடங்களில் மறுவாழ்வு மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு 81 இடங்களில் மறுவாழ்வு மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
ADDED : செப் 19, 2024 04:49 AM
சிவகங்கை: மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 81 மறுவாழ்வு இல்லங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையினால் மழை நீர் பெருக்கெடுத்து, மணிமுத்தாறு,சருகணி ஆறு,பாலாறு,வைகை உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும். இக்கால கட்டங்களில் மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, வீடுகளை பாதிக்கும்.கடந்த சில ஆண்டுக்கு முன் இம்மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளம் பாதித்த இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வர உள்ள வடகிழக்கு பருவ மழையால், பாதிப்பு ஏற்படாத வகையில், ஆறு, கண்மாய் வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதே போன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினரிடம் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு தேவையான 41 வகையான கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த பருவ மழை எச்சரிக்கையை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டிற்கு முன் வெள்ளம் பாதித்த 80 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க உள்ள 81 மறுவாழ்வு மையங்களில் (சத்துணவு மையம், பள்ளி கட்டடம், சமுதாயக்கூடம்) மின், குடிநீர், கழிப்பிட வசதிகள் போதிய அளவில் உள்ளதா என கணக்கிட்டு வருகின்றனர். வெள்ள காலத்தின் போது ஆறு, கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை தடுக்க, தேவையான மணல் மூடைகளை தயார் நிலையில் வைத்திருக்க அந்தந்த துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.