ADDED : அக் 23, 2025 11:30 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் பதின்ம மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தது.
போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தனர். நேற்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டி நடந்தது. நாளை 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள், அக்.28 ல் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள், அக்.29 அன்று 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் மாணவர்கள் நவ.24 முதல் 28 வரை நடைபெற உள்ள மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

