/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வார்டன், சமையலர் 'சஸ்பெண்ட்' மாவட்ட கலெக்டர் அதிரடி
/
வார்டன், சமையலர் 'சஸ்பெண்ட்' மாவட்ட கலெக்டர் அதிரடி
வார்டன், சமையலர் 'சஸ்பெண்ட்' மாவட்ட கலெக்டர் அதிரடி
வார்டன், சமையலர் 'சஸ்பெண்ட்' மாவட்ட கலெக்டர் அதிரடி
ADDED : அக் 31, 2025 01:06 AM
சிங்கம்புணரி:  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாணவியர் விடுதிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் பொற்கொடி, பணியில் இல்லாத வார்டன், முறையாக சமையல் செய்யாத சமையலர்கள் உள்ளிட்ட மூன்று பேரை 'சஸ்பெண்ட ் ' செய்தார்.
சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பட்டியலின மாணவிகளுக்கான சமூக நீதி விடுதியில் 60 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இவ்விடுதியில் கலெக்டர் பொற்கொடி அக்., 28ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஒரு சமையலர் மட்டும் இருந்துள்ளார். வார்டனும் மற்றொரு சமையலரும் வெளியே சென்றிருந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவியருக்கு இரவு உணவு சமைக்காமல் இருந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து விடுதி வார்டன் முத்துராணி மற்றும் இரண்டு சமையலர்களை, கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.