/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த ரோட்டால் கிராம மக்கள் அவதி
/
சேதமடைந்த ரோட்டால் கிராம மக்கள் அவதி
ADDED : அக் 31, 2025 12:32 AM

சிவகங்கை:  இடையமேலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் ரோடு முழுவதும் சேதமடைந்து சேறும் சகதியுமாக காணப்படுவதால் டூவீலரில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
சிவகங்கை அருகே மேலுார் ரோட்டில் உள்ளது இடையமேலுார் கிராமம். இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான மங்காம்பட்டி, சாலுார், உசிலம்பட்டி, கூவானிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் இங்குள்ள பள்ளியில் தான் படித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த பகுதியில் செல்லக்கூடிய ரோடு முழுவதும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல் உசிலம்பட்டி கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர்.
சேதமடைந்துள்ள இந்த ரோட்டால் பள்ளி செல்லும் மாணவர்களின் சைக்கிள் பஞ்சராகி அவர்கள் பள்ளி செல்வதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள இந்த ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

