/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் நாளை மருத்துவ முகாம்
/
இளையான்குடியில் நாளை மருத்துவ முகாம்
ADDED : அக் 31, 2025 12:31 AM
சிவகங்கை:  இளையான்குடி புனித அன்னாள் மெட்ரிக் பள்ளியில் நாளை (நவ., 1) அன்று நலம்  காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனை இலவசமாக வழங்கப்படும். கண், காது மூக்கு தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநல, சர்க்கரை நோய், நுரையீரல், பொது, இதய,  குழந்தைகள், தோல், சித்தா, இயன் முறை, அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் உட்பட 17 வகையான சிறப்பு நிபுணர்களை கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
இங்கு, எக்கோ, எக்ஸ்ரே,  அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், கர்ப்ப பை வாய்,  மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளி மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாமிற்கு ஆதார் அட்டை நகல் அவசியம் தேவை. இம்முகாம் மூலம் மருத்துவ காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ரேஷன், ஆதார் கார்டுடன் வி.ஏ.ஓ.,விடம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் இருப்பதற்கான சான்றுடன் வர வேண்டும்.

