நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்க சிவகங்கை மாவட்ட கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சந்திரன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் மனோகரன், மலைக்கண்ணன், பாரதி முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி பணிகள் அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் குமரேசன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், மாநில பொருளாளர் ரெங்கராஜன் கோரிக்கையை விளக்கி பேசினர்.
கூட்டத்தில் தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.