ADDED : ஜன 30, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கீழக்கண்டனி பண்ணை மாரி வேணி குளோபல் சி.பி.எஸ்.சி., பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் விளையாடினர். பள்ளி சேர்மன் கார்த்திக்கேயன், இணை சேர்மன் பரத்ஸ்ரீனிவாஸ், எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் நிரஞ்சன் ஸ்ரீனிவாசன் ஒருங்கிணைத்தனர். இன்டர்நேஷனல் பீச் வாலிபால் நடுவர் தமிழரசு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பள்ளி செயல் அலுவலர் சதீஷ்குமார், முதல்வர் சிவசங்கரி, பயிற்சியாளர் தேவேந்திரன் கலந்து கொண்டனர்.

