/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சென்னையில் பிப். 1 ல் மாநில தபால் தலை வினாடி வினா போட்டி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

ADDED : டிச 07, 2024 06:15 AM
சிவகங்கை: சென்னையில் மாநில அளவிலான தபால் தலை வினாடி வினா போட்டி 2025 பிப்., 1 ல் நடைபெறும் என சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் 14 வது மாநில தபால் தலை கண்காட்சி 2025 ஜன., 29 முதல் பிப்., 1 வரை நடக்கிறது.
இதையொட்டி ஆறாம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோட்ட அளவில் தபால் தலை வினாடி வினா போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில், புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
கோட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரையில் நடக்கும் மண்டல அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்படும். மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 2025 பிப்., 1 ல் சென்னையில் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெறும், என்றார்.