/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தபால் நிலையங்களில் துாய்மை பணி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
/
தபால் நிலையங்களில் துாய்மை பணி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தபால் நிலையங்களில் துாய்மை பணி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தபால் நிலையங்களில் துாய்மை பணி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
ADDED : செப் 27, 2024 06:38 AM
சிவகங்கை: சிவகங்கை தபால் கோட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி துாய்மை சிறப்பு பணி அக்., 2 வரை நடைபெறும் என கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு அறிவுறுத்தல்படி தபால் துறையில் 'ஸ்வட்சதா ஹி சேவா' துாய்மை பணி சிறப்பு முகாம் அக்., 2 வரை நடைபெறுகிறது.
இதற்காக சிவகங்கை கோட்டத்தில் மக்களிடம் துாய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை தபால் நிலையங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அனைத்து தபால் நிலையங்களிலும் துாய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது. அனைத்து தபால் நிலையங்களில் துாய்மை பணி நடைபெற்று வருகிறது, என்றார்.