/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்
/
காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்
காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்
காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்
ADDED : அக் 11, 2024 05:12 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் முத்துத்துரை தலைமை ஏற்றார். துணை மேயர் குணசேகரன், கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர்.
7வது வார்டு கவுன்சிலர் குருபாலு: எனது வார்டில் பணிகள் முறையாக நடைபெறவில்லை. டெண்டர் விட்ட வேலையும் நடக்கவில்லை. சாலையோர கடைகள் வசூலானது, மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் இருக்கும் படி நடைபெற வேண்டும்.
31வது கவுன்சிலர் பூமிநாதன்: தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது. தெரு நாய் இல்லாத மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு உடல் தகனத்திற்கு வசூல் செய்யப்படும் பணத்தை குறைக்க வேண்டும்.
27வது வார்டு அ.தி.மு.க.,கவுன்சிலர் பிரகாஷ்: கொசுவை தடுப்பதற்காக ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பள விவரம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சித்திக் குறுக்கிட்டு பேசினார். அப்போது கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் சித்திக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசியதால் பரபரப்பானது. ஒரு சில அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.