/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க. எம்.பி., யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க. எம்.பி., யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 11, 2024 05:47 AM

தேவகோட்டை: ஹிந்து மதம் குறித்து இழிவாக பேசிய தி.மு.க., ஆ.ராசாவை கண்டித்து தேவகோட்டையில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பாலா, மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், செல்வா, காரைக்குடி நகர் தலைவர் கார்த்திகேயன், நகர் பொது செயலாளர் மணிகண்டன், வி.எச்.பி., நகர் தலைவர் லட்சுமி நரசிம்மன், நகர் செயலாளர் வீரையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி: மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ், மனோஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ்ராஜா, பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் செந்தில், பா.ஜ., ஒன்றிய தலைவர் இளையராஜா, பொது செயலாளர் இளையராஜா, நகர தலைவர் வசீகரன், சண்முகம், ஒன்றிய மகளிரணி மீனாட்சி ரேகா, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முத்துப்பிரகாஷ் பங்கேற்றனர்.

