/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., நிர்வாகி கொலைக்கு பழி: ஆடு மேய்த்தவர் படுகொலை
/
தி.மு.க., நிர்வாகி கொலைக்கு பழி: ஆடு மேய்த்தவர் படுகொலை
தி.மு.க., நிர்வாகி கொலைக்கு பழி: ஆடு மேய்த்தவர் படுகொலை
தி.மு.க., நிர்வாகி கொலைக்கு பழி: ஆடு மேய்த்தவர் படுகொலை
ADDED : ஆக 02, 2025 09:48 PM

தேவகோட்டை:சிவகங்கை தி.மு.க., நிர்வாகி கொலைக்கு பழி தீர்க்க, கைது செய்யப்பட்டவரின் தந்தை ஆடு மேய்த்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகே சாமியார்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 27; தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஏப்., 27 மதியம் அவரது தோட்டத்தில் ஒரு கும்பல், அவரை வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக, அதே ஊரை சேர்ந்த கருப்பையா மகன் கருணாகரன், 20, சிவகங்கை காளவாசல் பிரபாகரன், 19, திருப்புத்துார் நரசிங்கபுரம் குரு, 21, செய்களத்துார் முகேஷ், 21, கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்த, 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சாமியார்பட்டியில் உள்ள கருணாகரன் வீடு தாக்கப்பட்டது. கருணாகரனின் தந்தை கருப்பையா, 60, தாய் விமலா, 55, ஆகியோர் தேவகோட்டை தாலுகா விளாங்காட்டூர் கிராமத்தில் ஐந்து மாதங்களாக தங்கி, ஆடு கிடை போட்டுள்ளனர்.
விளாங்காட்டூர் வயல்வெளியில், நேற்று காலை, 9:00 மணிக்கு, தம்பதி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, டூ - வீலரில் வந்த மூவர், விமலா கண் எதிரே கருப்பையாவை வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக மூவர் பெயரை விமலா கூறியுள்ளார். இதன் மூலம் பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
விமலா கூறுகையில், ''சில தினங்களுக்கு முன் ஊரில் வீட்டை நொறுக்கினர். தற்போது மூவர் வந்து என் கணவரை கொலை செய்து, சாவகாசமாக நடந்து டூ - வீலரில் சென்று விட்டனர்,'' என்றார்.
கருப்பையா உடலை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.