sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பழனிசாமி எக்ஸ் தள சவால் நழுவிய தி.மு.க., கனிமொழி

/

 பழனிசாமி எக்ஸ் தள சவால் நழுவிய தி.மு.க., கனிமொழி

 பழனிசாமி எக்ஸ் தள சவால் நழுவிய தி.மு.க., கனிமொழி

 பழனிசாமி எக்ஸ் தள சவால் நழுவிய தி.மு.க., கனிமொழி


ADDED : டிச 28, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று துாத்துக்குடி லோக்சபா தொகுதி உறுப்பினரும் தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி தனது தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை அழைத்து வந்து சுற்றி காட்டியதுடன் அவர்களுடன் அருங்காட்சியகத்தில் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

அவருடன் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி உள்ளிட்டோரும் வந்தனர். கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்த கனி மொழியை கீழடி அருங்காட்சியக இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் வரவேற்றனர்.

பின்னர் அவர் பேசும்போது: நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா என தனது எக்ஸ் தளத்தில் பழனிசாமி சவால் குறித்த கேள்விக்கு, முதல்வருக்கு தற்போது அதற்கு எல்லாம் நேரமில்லை எனக் கூறி நழுவிவிட்டார். 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக குறைக்க திட்டமிட்டு முதல் கட்டமாக பெயரை மாற்றியுள்ளது.

பல இடங்களில் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மத்திய அரசே முழு ஊதியத்தையும் வழங்கி வந்த நிலையில் தற்போது மத்திய அரசு 60 சதவிகிதம், மாநில அரசு 40 சதவிகிதம் என திருத்தம் கொண்டு வந்துள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us