ADDED : டிச 28, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்கு கீரனுார் ஊராட்சிக்குட்பட்ட வலையனுார் கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தெற்கு கீரனுார் ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர். நேற்று பா.ஜ.,நிர்வாகிகள், கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாளில் சரி செய்வதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

