/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நகராட்சியில் தரமற்ற ரோடு தி.மு.க., துணைத்தலைவர் போராட்டம்
/
மானாமதுரை நகராட்சியில் தரமற்ற ரோடு தி.மு.க., துணைத்தலைவர் போராட்டம்
மானாமதுரை நகராட்சியில் தரமற்ற ரோடு தி.மு.க., துணைத்தலைவர் போராட்டம்
மானாமதுரை நகராட்சியில் தரமற்ற ரோடு தி.மு.க., துணைத்தலைவர் போராட்டம்
ADDED : அக் 10, 2025 09:36 PM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தார் ரோடுகள் மிக தரமற்று இருப்பதாக கூறி பொறியாளரை கண்டித்து தி.மு.க., துணைத்தலைவர் பாலசுந்தரம் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நகராட்சியில் ரூ.15.14 கோடியில் தார் ரோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது. தி.மு.க., துணைத்தலைவர் பாலசுந்தரத்தின் 8 வது வார்டு மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர், மழைநீர் வாய்க்கால் அமைத்த பிறகு தான் ரோடுகள் அமைக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்று முன்தினம் நன்றாக இருந்த ரோடு மேல் புதிதாக ரோடு அமைக்கப்பட்டது. இதனால் நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் மற்றும் அதிகாரிகளை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு பொறியாளர் அறை முன் அமர்ந்து தி.மு.க., துணைத்தலைவர் பாலசுந்தரம் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த கவுன்சிலர்கள் அவரை தலைவர் மாரியப்பன் கென்னடி அறைக்கு அழைத்துச்சென்று பேசினர்.
துணைத்தலைவர் பாலசுந்தரம் கூறியதாவது: என் வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது அமைக்கப்படும் தார் ரோடுகள் மிக தரமற்று இருக்கின்றன. மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்த பிறகு தான் ரோடு அமைக்க வேண்டும் என முன்பே கூறியிருந்தேன். இந்நிலையில் நன்றாக இருந்த ரோட்டின் மீதே புதிதாக தார் ரோடு அமைத்துள்ளனர். இதுகுறித்து பொறியாளர் பட்டுராஜனிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினே் என்றார்.
பொறியாளர் பட்டுராஜன் கூறியதாவது, ''நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு விதிமுறைப்படி தான் தரமாக ரோடுகள் போடப்பட்டு வருகிறது,'' என்றார்.