/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் சிதறி கிடந்த மருத்துவக்கழிவுகள்
/
நான்கு வழிச்சாலையில் சிதறி கிடந்த மருத்துவக்கழிவுகள்
நான்கு வழிச்சாலையில் சிதறி கிடந்த மருத்துவக்கழிவுகள்
நான்கு வழிச்சாலையில் சிதறி கிடந்த மருத்துவக்கழிவுகள்
ADDED : அக் 10, 2025 12:12 AM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஊசி, சிரிஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் சிதறி கிடந்ததால் வாகன ஓட்டுகள் அவதிக்குள்ளாகினர்.
சில மாதங்களாக தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் மருத்துவக்கழிவுகளை கேரளாவில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மானாமதுரை ராஜகம்பீரம் நான்கு வழிச்சாலையில் நேற்றிரவு 8:30 மணியளவில் ஊசி, சிரிஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் சிதறி கிடந்தன. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். வாகனங்களில் மருத்துவக்கழிவுகளை கொண்டு சென்ற போது தவறி விழுந்ததா அல்லது அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வந்து போடப்பட்டதா என அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான பதிவுகளை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.