/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேய்ந்துவரும் ஊரக வளர்ச்சித்துறை தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஆதங்கம்
/
தேய்ந்துவரும் ஊரக வளர்ச்சித்துறை தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஆதங்கம்
தேய்ந்துவரும் ஊரக வளர்ச்சித்துறை தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஆதங்கம்
தேய்ந்துவரும் ஊரக வளர்ச்சித்துறை தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஆதங்கம்
ADDED : நவ 21, 2024 04:38 AM
இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை தேய்ந்து கொண்டே வருவதாக தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஆதங்கத்தோடு பேசினார்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.பி.டி.ஓ., முத்துக்குமரன்,மேலாளர் தீனதயாளன் வரவேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
செல்வி தி.மு.க., கவுன்சிலர்: சாலைக்கிராமத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தோடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பஸ் ஸ்டாண்ட் இருக்குமிடம் மிகக் குறுகிய இடம் என்பதாலும், ஏற்கனவே இப்பகுதியில் வணிக வளாகங்கள், சிவன் கோயில் உள்ளதால் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும்போது வணிக வளாகம் கட்டும் இடத்தை சுருக்காமல் இருக்கின்ற இடத்தில் முழுமையாக பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகம் அ.தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளை பிரித்து சாலைக்கிராமம் ஊராட்சி ஒன்றியம் புதிதாக உருவாக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
முருகன், தி.மு.க., கவுன்சிலர்: கடந்த 3 வருடங்களாக எந்த ஒரு நிதியும் வரவில்லை. மக்களுக்கு தேவையான திட்ட பணிகளை செய்ய முடியவில்லை. ஊரக வளர்ச்சித் துறை தேய்ந்து கொண்டே போகிறது. பொதுப்பணித்துறை, மின்சார துறை செயல்படுகிறதா என தெரியவில்லை.இத்துறைகளின் கீழ் இதுவரை இந்த ஒன்றியத்தில் ஒரு பணியும் நடைபெற்றதாக தெரியவில்லை. காவிரி கூட்டு குடிநீர் இப்பகுதியில் ஏராளமான கிராமங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக வரவில்லை.
கீர்த்தனா அ.தி.மு.க., கவுன்சிலர்: மேலாயூரில் அய்யனார் கோயில் அருகிலும், விஜயன் குடியில் முளைக்கட்டு திண்ணையை சுற்றிலும் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும், தற்போது மழைக்காலம் என்பதால் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.ஓ., முத்துக்குமரன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி: ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.