/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணின் கர்ப்பப்பையில் பஞ்சு வழக்கம் தான் என்கிறார் டாக்டர்
/
பெண்ணின் கர்ப்பப்பையில் பஞ்சு வழக்கம் தான் என்கிறார் டாக்டர்
பெண்ணின் கர்ப்பப்பையில் பஞ்சு வழக்கம் தான் என்கிறார் டாக்டர்
பெண்ணின் கர்ப்பப்பையில் பஞ்சு வழக்கம் தான் என்கிறார் டாக்டர்
ADDED : ஜன 03, 2025 12:15 AM

காரைக்குடி:காரைக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை ஆப்பரேஷன் செய்த பெண்ணுக்கு பஞ்சை வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆண்டாள் ஊரணியை சேர்ந்தவர் காளியம்மாள் 45. கர்ப்பப்பை பிரச்னை காரணமாக கடந்த அக்டோபரில் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இவருக்கு கர்ப்பப்பை ஆப்பரேஷன் செய்யப்பட்ட போது உள்ளே பஞ்சை வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் சுந்தர் கூறியது: ஆப்பரேஷன் செய்து ஒரு வாரம் தங்க கூறினர். எனினும் தொடர்ந்து வலியிருந்தது. அரசு மருத்துவமனைக்கு வந்து கேட்டபோது வலிக்கு மாத்திரை கொடுத்து அனுப்பி வைத்தனர். சில நாட்கள் வலி இருக்கும் என்று கூறினர். ஆனாலும் வலி குறையவே இல்லை.
தொடர்ந்து திருவாடானை மருத்துவமனை ஒன்றில் சென்று பார்த்தபோது ஆப்பரேஷன் செய்யும்போது பஞ்சை உள்ளே வைத்து தைத்தது தெரிய வந்தது. பஞ்சு அகற்றப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்பரேஷன் செய்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில், 'கர்ப்பப்பை ஆப்பரேஷன் செய்த பின்பு, சில பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க காட்டன் பிளாக் வைப்பது வழக்கம். அந்தப் பஞ்சை சில நாட்கள் கழித்து எடுக்க வேண்டும். இங்கே எடுக்காமல் அந்த மருத்துவமனையில் எடுத்திருப்பார்கள். அது குறித்து தெரியாமல் கூறுகின்றனர்' என்றார்.