ADDED : அக் 25, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் மதியழகன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் டாக்டர் செந்தில் டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். டி.எம்.இ.,செயலாளர் டாக்டர் செந்தில், டி.எம்.எஸ்., செயலாளர் டாக்டர் ஜெயபாண்டி, டி.பி.எச்., செயலாளர் டாக்டர் ஆனந்தராஜ், மாவட்ட பொருளாளர் டாக்டர் ராஜேஷ் கலந்துகொண்டனர்.
மாவட்ட முழுவதிலும் இருந்து 150 டாக்டர்கள் கலந்துகொண்டனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பற்றக்குறையை அரசு போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.