/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாம்பு கடித்த 4 வயது குழந்தையை போராடி காப்பாற்றிய டாக்டர்கள்
/
பாம்பு கடித்த 4 வயது குழந்தையை போராடி காப்பாற்றிய டாக்டர்கள்
பாம்பு கடித்த 4 வயது குழந்தையை போராடி காப்பாற்றிய டாக்டர்கள்
பாம்பு கடித்த 4 வயது குழந்தையை போராடி காப்பாற்றிய டாக்டர்கள்
ADDED : பிப் 16, 2025 06:49 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் பாம்பு கடித்த 4 வயது குழந்தைக்கு ஒரு மாதம் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவினருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சன்னா பாபு தம்பதி. இவர்களது4 வயது பெண் குழந்தை ஜன.16 இரவு பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் குழந்தையின் வலது கையில் பாம்பு கடித்த காயத்தை கண்டுமுதலுதவி சிகிச்சை மற்றும் பாம்புகடி விஷமுறிவு மருந்து செலுத்தினர்.
விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கியதால் குழந்தை சுயநினைவை இழந்து சுவாச தசை பாதிப்பால் மூச்சு நிற்கும் நிலையை எட்டினார்.குழந்தைக்கு செயற்கை சுவாச சிகிச்சையுடன் சிறப்பு மருந்து கொடுக்கப்பட்டது.
சுவாச தொற்றுக்கும் இதய ஓட்டத்திற்கும் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நீண்டநாள் செயற்கை சுவாச கருவி சிகிச்சை தொடர்ந்ததால் குழந்தைக்கு மூச்சுக் குழாயில் துளையிட்டு அதன் வாயிலாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சுயநினைவுக்கு திரும்பினார்.
நேற்றுமுன்தினம் குழந்தையின் 4 வது பிறந்த நாளில் சிகிச்சை நிறைவு பெற்று வீட்டிற்கு சென்றார்.
டாக்டர் குழுவினர்கேக் வெட்டி குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினர். குழந்தையின் பெற்றோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தங்கள் குழந்தையின் மறுபிறப்பிற்கு உதவிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கண்ணீர் மல்கநன்றியை தெரிவித்தனர்.
குழந்தை நலப் பிரிவு பேராசிரியர் டாக்டர் சிவக்குமார், டாக்டர் பாலசுப்ரமணியன்,டாக்டர் வனிதா, மயக்கவியல் பேராசிரியர் வேல்முருகன், காது மூக்கு தொண்டை பேராசிரியர்கள் நாகசுப்ரமணியன், விஜய் பாபு, உதவி பேராசிரியர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் குழுவினரை மருத்துவக் கல்லுாரி முதல்வர்சத்தியபாமா பாராட்டினார்.