/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ஒரே நாளில் நான்கு பேரை கடித்த நாய்
/
திருப்புவனத்தில் ஒரே நாளில் நான்கு பேரை கடித்த நாய்
திருப்புவனத்தில் ஒரே நாளில் நான்கு பேரை கடித்த நாய்
திருப்புவனத்தில் ஒரே நாளில் நான்கு பேரை கடித்த நாய்
ADDED : அக் 16, 2025 11:46 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று ஒரே நாளில் நான்கு பேரை வெறிநாய் கடித்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புவனத்தில் ரோட்டை ஒட்டி ஏராள மான மீன், கோழி, ஆடு இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கடைகளில் மீதமாகும் கழிவுகளை ரோட்டில் வீசுவதால் அதனை உண்பதற்காக ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.
இறைச்சி கழிவுகளை போட்டி போட்டு உண்ணுவதில் மோதல் ஏற்பட்டு நாய்களுக்குள் வெறி ஏற்பட்டு ஒன்றுக்கு ஒன்று கடித்து குதறி விடுகின்றன. மோதலில் காயமடைந்த நாய் வெறி பிடித்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி கடித்து காயப்படுத்தி வருகிறது.
நேற்று திருப்புவனம் வண்டல் நகரில் தெருக்களில் நடந்து சென்றவர்களை நாய் கடித்ததில் நான்கு பேர் காய மடைந்தனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.