/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மீண்டும் திறக்கப்பட்ட ரயில்வே கேட்
/
மானாமதுரையில் மீண்டும் திறக்கப்பட்ட ரயில்வே கேட்
ADDED : அக் 16, 2025 11:46 PM
மானாமதுரை: மானாமதுரையில் பைபாஸ் ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில் பொது மக்கள், சர்வ கட்சியினர், சங்கத்தினர் போராட்டத்தால் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை செல்லும் சர்வீஸ் ரோட்டில் உள்ள பைபாஸ் ரயில்வே கேட் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த நிலையில் ரயில்வே நிர் வாகம் அதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியானது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மூட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்த போது மானாமதுரை, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் போராட்டங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
மீண்டும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மராமத்து பணி செய்வதாக கூறி ரயில்வே கேட்டின் இரு புறங்களிலும் பள்ளங் களை தோண்டி வாக னங்கள் செல்ல முடியாதவாறு ரயில்வே கேட்டை மூடினர். கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை 11:30 மணிக்கு மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் சிவகங்கை கோட்டாட்சி யர் ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ண குமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சர்வ கட்சியினர் பல்வேறு சங்கத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் வரை ரயில்வே கேட்டை திறப்பதாக முடிவு எடுக்கப் பட்டது.