/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரசவத்தில் குழந்தை இறப்பு: சந்தேகம் இருப்பதாக போராட்டம்
/
பிரசவத்தில் குழந்தை இறப்பு: சந்தேகம் இருப்பதாக போராட்டம்
பிரசவத்தில் குழந்தை இறப்பு: சந்தேகம் இருப்பதாக போராட்டம்
பிரசவத்தில் குழந்தை இறப்பு: சந்தேகம் இருப்பதாக போராட்டம்
ADDED : அக் 16, 2025 11:46 PM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே தனியார் மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. ஆத்திரம் அடைந்த குழந்தை யின் தந்தை மருத்துவமனை கண்ணாடியை உடைத்தார். -
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தளிர் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவரது மனைவி மோனிகா 26., கர்ப்பிணியான இவர் தேவகோட்டை அருகே புளியால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மோனிகா தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பரிசோதித்த டாக்டர்கள் தாய், சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் அறுவை சிகிச்சை செய்தால் தான் இரண்டு பேரையும் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. நன்றாக இருக்கிறது என்றும் ஆப்பரேஷனில் காப்பாற்றி விடலாம் என்று கூறிய போது குழந்தை இறந்தது எப்படி என கூறிய கணவர் ஆத்திரத்தில் தனியார் மருத்துவமனை கண் ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
இறந்த குழந்தையின் உடல் சிவகங்கை மருத்துவகல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தை யின் தாயார் மோனிகாவும், கண்ணாடி உடைத்த தில் காயம் ஏற்பட்ட கணவர் கார்த்திகேயனும் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தாலுகா போலீசார் குழந்தை இறப்பில் சந்தேகம் என வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்தும், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.