ADDED : அக் 16, 2025 11:46 PM
சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை வட்டார தலைநகரில் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கையில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.இளங்கோவன், மானா மதுரையில் இடைநிலை ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், திருப்புவனத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், காளையார்கோவிலில் தமிழக தமிழாசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ராம் குமார், தேவகோட்டையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சகாயதைனேஸ், திருப்புத்துாரில் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துமாரியப்பன், காரைக்குடியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் டேவிட் அந்தோணிராஜ், சிங்கம்புணரியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ், இளையான்குடியில் வட்டார ஒருங்கிணைப் பாளர் ஜான்சன் அந்தோணி உள்ளிட்டோர் தலைமையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.