/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குஓவியம், வர்ணம் தீட்டும் போட்டி
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குஓவியம், வர்ணம் தீட்டும் போட்டி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குஓவியம், வர்ணம் தீட்டும் போட்டி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குஓவியம், வர்ணம் தீட்டும் போட்டி
ADDED : நவ 22, 2025 03:07 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் நடந்த போட்டியை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட அளவில் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஓவியம், வர்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்று வழங்கினர்.
மாவட்ட அளவில் முதல் 3 இடம் பிடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, டிச., 3 அன்று சிவகங்கையில் நடக்க உள்ள மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பரிசு தொகை, சான்றுகளை வழங்குவார். இதில் முதல்பரிசு ரூ.1,000, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.250 வழங்கப்படும்.