/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு டவுன் 'பஸ்'க்கு 'விடியல்' தந்த மாணவர்கள்
/
அரசு டவுன் 'பஸ்'க்கு 'விடியல்' தந்த மாணவர்கள்
ADDED : நவ 22, 2025 03:06 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நகர முடியாமல் வழியில் நின்ற அரசு டவுன் பஸ்சை மாணவர்கள் தள்ளிவிட்டு விடியல் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை 9:00 மணிக்கு மணல்மேட்டுப்பட்டி செல்வதற்காக அரசு டவுன் பஸ் வெளியே வந்தபோது இன்ஜின் பழுதாகி வழியில் நின்றது. இதனால் மற்ற பேருந்துகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
டிரைவர், கண்டக்டர்களுக்கு உதவ யாரும் வரவில்லை. கண்டக்டர் தனியாக பஸ்சை தள்ளிப் பார்த்தார், நகரவில்லை. அங்கிருந்த மாணவர்கள் சிலர் பஸ்சை மீண்டும் பஸ் ஸ்டாண்ட் உள்ளே தள்ளிச் சென்றனர்.
பிறகு இன்ஜின் சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றது. திருப்புத்தூர் டெப்போவில் இருந்து சிங்கம்புணரி பகுதிக்கு காலாவதியான ஓட்டை பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இவை பல நேரங்களில் நடுரோட்டில் நின்று பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். தரமான பஸ்களை இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

