/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரவில் சோதனையால் வீணாக கால்வாயில் கலக்குது குடிநீர்
/
இரவில் சோதனையால் வீணாக கால்வாயில் கலக்குது குடிநீர்
இரவில் சோதனையால் வீணாக கால்வாயில் கலக்குது குடிநீர்
இரவில் சோதனையால் வீணாக கால்வாயில் கலக்குது குடிநீர்
ADDED : மார் 17, 2025 06:33 AM
திருப்புவனம் திருப்புவனத்தில் புதிதாக பதிக்கப்பட்ட குழாய்களில் இரவு நேரத்தில் சோதனை ரீதியாக தண்ணீர் திறக்கப்படுவதால் யாருக்கும் பயனின்றி சாக்கடையில் சென்று வீணாக கலந்து வருகிறது.
திருப்புவனத்தில் ரூ.16 கோடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 18 வார்டுகளில் 7,000 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது. திருப்புவனம் வைகை ஆற்றில் திறந்த வெளி கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மூன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் வராத சமயங்களில் திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. புதிய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் சோதனை ரீதியாக தண்ணீர் குழாய்கள் வழியாக செலுத்தப்படுகிறது.
நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்படுவதால் யாருக்கும் பயனின்றி தண்ணீர் வீணாகி வருகிறது. பகல் நேரங்களில் திறக்கப்பட்டால் பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைக்க வசதியாக இருக்கும்.
கடும் கோடை வெயில் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் தண்ணீர் வீணாக சாக்கடையில் சென்று கலப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதமே குடிநீர் தட்டுப்பாடு தொடங்கியுள்ள நிலையில் இனி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு.