UPDATED : நவ 19, 2026 06:12 PM
ADDED : நவ 19, 2026 06:12 PM

அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் நாகராஜன் நகர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் விரிசலால் பல நாட்களாக குடிநீர் வெளியேறி வீணாகிறது.
நாகராஜன் நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு புதிய குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் நடக்கிறது. குடிநீர் விநியோகிக்கப்படும் போது பல இடங்களில் குடிநீர் கசிவால் வெளியேறுகிறது. குறிப்பாக நாகராஜ் நகர் மூன்றாவது வீதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல வாரங்களாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
பொதுமக்கள் புகார் தெரிவித்தும் குழாய் பராமரிப்பு பணி நடைபெறவில்லை. குழாய் பராமரிப்பை விரைவாக மேற்கொள்ள குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர்.
