UPDATED : நவ 19, 2026 06:12 PM
ADDED : நவ 19, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
குன்றக்குடி: குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் பால் மதிப்புகூட்டல் மற்றும் பன்னீர் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
முகாமிற்கு வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அனிதா ஸ்ரீ, தொழில்நுட்ப வல்லுநர் விக்னேஷ் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பால், அவை சார்ந்த பொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றுவதன் முக்கியத்துவம், கூடுதல் வருமானம் பெறுதல், பன்னீரின் ஊட்டச்சத்து நன்மை குறித்து விளக்கம் அளித்தனர். முகாமில் தொழில்முனைவோர், மகளிர்குழு வினர் பங்கேற்றனர். ///
