/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களில் குடிநீர் பிரச்னை 100 நாள் வேலை சம்பள பாக்கி வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

ADDED : மார் 17, 2024 12:51 AM
திருப்புத்துார்: நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கிராமங்களுக்கு செல்லும் கட்சியினரிடம், குறிப்பாக வேட்பாளரிடம் பொதுமக்கள் குடிநீர் பிரச்னை மற்றும் 100 நாள் வேலைக்கான சம்பளபாக்கி குறித்து கேள்வி எழுப்ப காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு பருவமழை காலம் தவறி குறைவாக பெய்துள்ளது. பெரும்பாலும் வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்ட பகுதியில் கண்மாய்களில் போதிய நீர் இன்றி வறட்சியாக உள்ளது. இப்பகுதிகளில் ஜல் ஜீவன் மூலம் காவிரி குடிநீர் வழங்கும் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. பழைய திட்டங்கள் மூலம் வளர்ச்சியடைந்த பகுதிக்கு முழுமையான விநியோகமும் இல்லை.
விநியோகிக்கப்படும் தண்ணீர் பெரும்பாலும் சமைக்கவோ,குடிக்கவோ பயன்படுத்த முடியவில்லை. மேலும் கோடை வெப்பம் அதிகரிக்கும் போது நிலத்தடி நீர் மட்டம் குறையும். அதனாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
இந்நிலையில் தற்போது கிராமங்களுக்கு செல்லும் அரசியல் கட்சியினர்,அதிகாரிகளிடம் மக்கள் குடிநீர் பிரச்னை குறித்து கேட்கத் துவங்கியுள்ளனர்.
ஏப்.19ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்திற்கு செல்லும் அரசியல் பிரமுகர்களிடம் மக்கள் முதலில் கேட்பது குடிநீர் பிரச்னை என்றால், அடுத்து நுாறுநாள் வேலை திட்டத்திற்கான சம்பளப் பாக்கியாகத்தான் இருக்கும்.