ADDED : மே 01, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கான குடிநீர் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க உள்ளது.
திருப்புத்துார் நகரில் அம்ரூத்2.0 திட்டத்தின் கீழ் ரூ 21.67 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தித் திட்ட பணிகள் நடந்து வருகிறது. தம்பிபட்டி, தென்மாப்பட்டில் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரத்திற்காக பெரியகண்மாயில் 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறும் போடப்பட்டுள்ளது.குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன.
தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மேல்நிலைத்தொட்டி, தரைமட்டத் தொட்டி பணிகள் விரைவில் முடிய உள்ளது. போர்வெல் நீர் தரைமட்டத்தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு குழாய்களில் சோதனை நீரோட்டம் துவங்கும். இரு வாரங்களில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்.