/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் தொட்டி பழுதால் பல நாட்களாக குடிநீர் வீண்
/
குடிநீர் தொட்டி பழுதால் பல நாட்களாக குடிநீர் வீண்
ADDED : அக் 10, 2024 06:18 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குடிநீர் தொட்டி பழுது காரணமாக தண்ணீர் வீணாகி கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ் ஒன்றியத்தில் எஸ்.மாத்துார் ஊராட்சி எஸ்.கோட்டைப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக உள்ள ஒரே தண்ணீர் தொட்டியும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆனாலும் அத்தொட்டி மூலமாகவே வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தொட்டியில் கீழே குழாய் பழுது காரணமாக பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. எஞ்சிய தண்ணீர் மட்டுமே காலை, மாலை ஷிப்ட் அடிப்படையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. தற்காலிகமாக குடிநீர் குழாய்களை சீரமைத்து, விரைவில் புதிய தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கும் முறையாக குடிநீர் வழங்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

