UPDATED : அக் 26, 2026 06:21 PM
ADDED : அக் 26, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் உள்ள கிராமங்களில் குடி நீர் தேவைக்காக பொதுக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பொதுக் குழாய்கள் சேதமடைந்துடன் குழாய்களில் உள்ள திருகுகள் மாயமாகி விட்டன. அதனை சரி செய்யாமல் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவதால் வீணாகி வருகிறது.
தினசரி கலியாந்தூர், தி. பழையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் வீணாகி வருகிறது. புகார் அளித்தும் திருகு பொருத்தாமல் இருப்பதால் குடி நீர் வீணாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த குழாய்களை சரி செய்வதுடன் திருகுகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
