/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் லாரிகளில் விதிமீறி செல்லும் கட்டுமான பொருள் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : செப் 29, 2025 06:42 AM
காரைக்குடி : காரைக்குடி பகுதியில் கனரக வாகனங்களில் விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மாவட்டத்திலேயே பெரிய கல்வி நகரம் காரைக்குடி மாநகராட்சி தான். நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப ரோடு வசதிகளையும் செய்து வருகின்றனர். ஆனால், விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கனரக வாகனங்களில் விதிகளை மீறி கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், ஆற்று மணலை அதிகளவில் எடுத்து செல்கின்றனர். மேலும் மணல் லாரிகள் மீது தார்பாய்கள் போட்டு மூடுவதே இல்லை. இதனால் கனரக வாகனங்களின் பின்னால் வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் விதிகளைமீறி அதிகளவில் லாரிகளில் சரக்கு ஏற்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.