தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: நெற் பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ட்ரோன் தொழில்நுட்பம்’ மூலம் மருந்து தெளிப்பது உதவும் என்று வேளாண்துறையினர் திருப்புத்தூர் பகுதி வயல்களில் அட்மா -விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடந்த செயல்விளக்கத்தில் விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

திருக்களாப்பட்டியில் நடந்த செயல் விளக்கத்திற்கு வேளாண் உதவி இயக்குனர் எஸ்.என். செந்தில்நாதன் தலைமை வகித்தார். செயல்விளக்கத்தை துணை வேளாண் அலுவலர் சுரேஷ்குமார், உதவி விதை அலுவலர் வடிவேல், உதவி வேளாண் அலுவலர் விஜயக்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதர்சன், உதவி தொழில் நுட்ப மேலாளர் சண்முகப்பாண்டி குழுவினர் செய்தனர்.

செயல் விளக்கம் குறித்து செந்தில்நாதன் கூறியதாவது: ட்ரோன் மூலம் மருந்தடிப்பதால் மருந்து கலவை நீர்துளிகள் பயிர்களின் இலைகளின் மீது நேரடியாக பாயும். இதனால் 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும் 40சதவீத பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடியும். நாளொன்றுக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கலாம். 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கர் மருந்து தெளிக்க முடியும். ரசாயனங்களை சரியான அளவில் முறையாக பயன்படுத்தினால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும்.

மேலும் வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் மாற்றியுள்ளது. .நெற்பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது. ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு அதிக அளவில் கை கொடுக்கும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us