ADDED : ஆக 16, 2025 02:41 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடம் போதை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பள்ளித் துணை முதல்வர் பூமிநாதன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் பாலமுருகன் வரவேற்றார். சிங்கம்புணரி எஸ்.ஐ., சேவுகவீரையா மாணவரிடத்தில் போதை விழிப்புணர்வு குறித்து பேசினார். போக்குவரத்து காவலர் இளையராஜா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீனா அமுலரசு நன்றி கூறினார்.
* தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
டி.எஸ்.பி. கவுதம் போதை பழக்கத்தின் விளைவு பற்றி கூறியதோடு, போதை பொருள் கிடைப்பது பற்றி தகவல் தெரிவிக்க கேட்டு கொண்டார். மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். துணை முதல்வர்கள் டென்சிங் ராஜன் விக்டர் பெனவெட் ராஜ் பங்கேற்றனர்.