/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதையில் தகராறு : போலீசார் விசாரணை
/
போதையில் தகராறு : போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 04, 2025 02:57 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் இரவு காவலர் போதையில் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் 47. அதே அலுவலகத்தில் இரவு காவலராக பணிபுரிபவர் காஞ்சிரங்காலை சேர்ந்த மலைச்சாமி 37. இவர் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு போதையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு பதிவு செய்ய வந்த பெண்ணை டூவீலரில் மோதுவது போல் சென்றுள்ளார். அதை பார்த்தவர்கள் அலுவலகத்திற்குள் வந்து புகார் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் மற்றும் அலுவலக உதவியாளர் நவீன்குமார், மலைச்சாமியிடம் ஏன் இப்படி குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு மலைச்சாமி அசிங்கமாக பேசி தகராறு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.