/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர் ஓட்டி பாலத்தில் மோதி சிறுவன் காயம் டி.எஸ்.பி., எச்சரிக்கை
/
டூவீலர் ஓட்டி பாலத்தில் மோதி சிறுவன் காயம் டி.எஸ்.பி., எச்சரிக்கை
டூவீலர் ஓட்டி பாலத்தில் மோதி சிறுவன் காயம் டி.எஸ்.பி., எச்சரிக்கை
டூவீலர் ஓட்டி பாலத்தில் மோதி சிறுவன் காயம் டி.எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : டிச 30, 2024 07:20 AM
பூவந்தி : பூவந்தி அருகே படமாத்தூர் ரோட்டில் 14 வயது சிறுவன் ஓட்டிய டூ வீலர் விபத்திற்கு உள்ளானது.இதனால் வண்டியின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
படமாத்தூர் அருகே சித்தாலங்குடி கார்த்திகை ராஜா 33. இவர் தனது டூவீலரை உறவினரின் 14 வயது மகனுக்கு கொடுத்துள்ளார். சிறுவன் கடைக்கு சென்று திரும்பி அதிவேகத்தில் வந்து படமாத்தூர் ரோடு பாலத்தில் மோதி தலையில் காயம் ஏற்பட்டது.
அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டூவீலர் ஓட்டிய சிறுவன் மீதும், உரிமையாளர் கார்த்திக்ராஜா மீதும் பூவந்தி போலீசார் வழக்கு பதிந்தனர்.
சிறுவர், சிறுமிகளுக்கு டூவீலரை ஓட்ட வழங்கினால், அந்த வண்டியின் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தெரிவித்தார்.