/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் சப்ளை செய்யாததால், பொதுமக்கள் குடிநீரின்றி தவிப்பு
/
குடிநீர் சப்ளை செய்யாததால், பொதுமக்கள் குடிநீரின்றி தவிப்பு
குடிநீர் சப்ளை செய்யாததால், பொதுமக்கள் குடிநீரின்றி தவிப்பு
குடிநீர் சப்ளை செய்யாததால், பொதுமக்கள் குடிநீரின்றி தவிப்பு
ADDED : ஜூலை 15, 2024 04:54 AM
காரைக்குடி : காரைக்குடிக்கு மிக அருகில் என்.ஜி.ஓ., காலனி, கம்பன் நகர் மக்களுக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்யாததால், பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்பன் நகர், என்.ஜி.ஓ., காலனியில் 200 க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஊராட்சி சார்பில் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளவில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டியுள்ளனர்.
இத்தொட்டி மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இப்பகுதி மக்களின் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
சங்கராபுரம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் மேல்நிலைதொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லாமல், அலைக்கழிப்பு செய்வதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் கடந்த3 நாட்களுக்கும் மேலாக குடிநீரின்றி மக்கள் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து என்.ஜி.ஓ., காலனி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் ஆழ்துழாய் கிணறுகள் இன்றி, ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை வைத்து தான் வாழ்வாதாரம் நடத்துகிறோம். கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் இன்றி, வீடுகளில் தண்ணீரின்றி பிற வேலைகளை செய்ய முடியாமல் தவிக்கிறோம்.