/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் காதைப்பிளக்கும் ஏர்ஹாரன்
/
திருப்புவனத்தில் காதைப்பிளக்கும் ஏர்ஹாரன்
ADDED : நவ 26, 2024 05:11 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கனரக வாகனங்கள், டூவீலர்கள், பஸ்கள் என பலவற்றிலும்சட்டவிரோதமாக ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் காதை பிளக்கும் ஏர் ஹாரன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களில் சட்டவிரோதமாக ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்புவனம் வழியாக மதுரை, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. நகருக்குள் நுழையும் போதே தனியார் பஸ்கள் ஏர் ஹாரனை ஒலித்தபடியே அசுர வேகத்தில் வருகின்றன. இதனால் மற்ற வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து செல்பவர்கள் என பலரும் காதை பொத்தியபடி ஓட வேண்டியுள்ளது.
இது தவிர திருப்புவனம் பகுதியில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களுக்கு செங்கல்,சித்துக்கல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் திருப்புவனத்தை கடந்து செல்கின்றன. திருப்புவனத்தில் ரோட்டை ஒட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி, மருத்துவமனை பகுதிகளில் ஹாரன்களே அடிக்க கூடாது என்ற நிலையில் பலரும் சட்டவிரோதமாக ஏர்ஹாரன் பொருத்தி கொண்டு வலம் வருகின்றன. இளைஞர்கள்பலரும் இரு சக்கர வாகனங்களில் வித விதமான ஹாரன்கள் பயன்படுத்துவதால் பலரும் சிரமப்படுகின்றனர்.