/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி; மானாமதுரையில் மணல் திட்டுக்கள்
/
வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி; மானாமதுரையில் மணல் திட்டுக்கள்
வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி; மானாமதுரையில் மணல் திட்டுக்கள்
வைகை ஆற்றில் நீர்வரத்து எதிரொலி; மானாமதுரையில் மணல் திட்டுக்கள்
ADDED : ஜன 14, 2025 10:39 PM

மானாமதுரை; வைகை ஆற்றில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் ஓடியதால், ஆற்றில் மீண்டும் மணல் திட்டுக்கள் உருவாகியுள்ளன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 3 மாதமாக தண்ணீர் சென்றதால் மானாமதுரை நகர பகுதி வைகை ஆற்றுக்குள் எங்கு பார்த்தாலும் நாணல், புல் செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்திருந்த நிலையில் தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மீண்டும் மணல் திட்டுக்கள் உருவாகி உள்ளன. மானாமதுரையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றுக்குள் தான் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் காலப்போக்கில் மணல் திருட்டு மற்றும் கழிவு நீரை விடுதல், குப்பைகளை கொட்டுதல் போன்ற காரணங்களால் புல்,நாணல் செடிகள், கருவேல மரங்கள் வளர்ந்து தற்போது நகர் பகுதி வைகைஆற்றில் ஒரு பிடி மண் கூட இல்லாமல் காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தொடந்து கடந்த 3 மாதங்களாக வைகை ஆற்றில் தண்ணீர் சென்றதன் விளைவாக ஆங்காங்கே மீண்டும் மணல் திட்டுக்கள் உருவாகி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உறுதுணையாக இருந்து வருகிறது.