ADDED : அக் 18, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டு போட்டி,திருப்புவனத்தில் 5000 மரக்கன்று நடுதல், கல்வி கடன் வழங்கும் முகாமினை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் துவக்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நல அலு வலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.
திருப்புவனம் அருகே நரிக்குடி விலக்கில் தேசிய நெடுஞ்சாலையில் 5000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். காளையார்கோவிலில் கலெக்டர் தலைமையில் நடந்த கல்வி கடன் முகாமிற்கு முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் வரவேற்றார். முகாமில் 26 மாணவர்களுக்கு ரூ.1.56 கோடிக்கான கல்விக் கடன் உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.