/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு
/
டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு
டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு
டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு
ADDED : அக் 18, 2025 03:56 AM

சிவகங்கை: மானாமதுரையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் உதவியாள ராக பணிபுரிந்தார். 2025 ஏப்., 26 அன்று டூவீலரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
எஸ்.பி.ஐ., மூலம் விபத்து காப்பீட்டிற்காக சம்பளத்தில் பிரீமிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. உயிரிழந்த முத்துப்பாண்டியின் குடும்பத்திற்கு விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடிக்கான காசோலையை, முத்துப்பாண்டியின் தந்தை ராசு, அவரது தாய், மனைவி யிடம் சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார்.
கூடுதல் எஸ்.பி., சுகுமாறன், எஸ்.பி.ஐ., மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், முதன்மை மேலாளர்கள் செல்வகுமார், கென்னடி, மேலாளர் நித்திலவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.