/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் தீக்குளித்த முதியவர் பலி
/
காரைக்குடியில் தீக்குளித்த முதியவர் பலி
ADDED : நவ 14, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மகர்நோன்பு திடல் அருகே வசிப்பவர் அருணாச்சலம் 76. இவருக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.
மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். மனைவியுடன் வசித்து வந்த அருணாச்சலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். விரக்தியில் இருந்தவர், நேற்று மதியம் பெட்ரோல் கேனுடன் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.
முதலாவது பிளாட்பாரத்தில் நின்றபடி உடலில் பெட்ரோலை ஊற்றி வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்தவரை போலீசார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார்.

