/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருவேகம்புத்துாரில் முதியவர் கொலை
/
திருவேகம்புத்துாரில் முதியவர் கொலை
ADDED : ஆக 30, 2025 03:55 AM
சிவகங்கை: திருவேகம்புத்துார் அருகே முன்விரோதம் காரணமாக ஆடு மேய்த்த கருப்பையா 60,வை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை அருகே சாமியார்பட்டி பிரவீன்குமார் 27. இவர் தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளராக இருந்தார். ஏப்., 27 அன்று மதியம் சாமியார்பட்டி தோப்பில் இருந்த பிரவீன்குமாரை கும்பல் வெட்டி கொலை செய்தது. இக்கொலை தொடர்பாக சாமியார்பட்டி கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது கருணாகரனின் வீட்டை தாக்கியுள்ளனர். இதனால், கருணாகரனின் தந்தை கருப்பையா 60, தாய் விமலா 55 இருவரும், சாமியார்பட்டியில் இருந்து இடம் பெயர்ந்து, தேவகோட்டை அருகே விளங்காட்டூரில் தங்கி ஆடுகளை மேய்த்து வந்தனர். ஆக., 2 ம் தேதி காலை 8:00 மணிக்கு விளாங்காட்டூரில் ஆடு மேய்த்த கருப்பையாவை டூவீலரில் வந்த 3 பேர் வெட்டி கொலை செய்தனர்.
இக்கொலை தொடர்பாக திருவேகம்புத்துார் போலீசார் சாமியார்பட்டி பாக்கியநாதன் மகன் இளையராஜா 41, தங்கராஜ் மகன்கள் தர்மராஜா 43, மகாராஜா 34 ஆகிய 3 பேரை கைது செய்தனர். பழிக்கு பழி தீர்க்கும் விதமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, இவர்கள் மூன்று பேர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, 3 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார். சிறையில் இருந்த 3 பேருக்கும் குண்டர் தடுப்பு காவல் உத்தரவை போலீசார் வழங்கினர்.