/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அருகே முதியவர் கொலை
/
திருப்புவனம் அருகே முதியவர் கொலை
ADDED : ஜன 09, 2025 05:16 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே காஞ்சிரங்குளத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிரங்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா 70, இவரது வீட்டின் முன்புறம் முருகன் என்பவர் குடியிருந்து வருகிறார், முருகனின் மகன் சக்திகணேஷ் 18, கொத்தனாராக பணிபுரியும் இவர் மீது மதுரையில் திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று காலை சக்திகணேஷ் போதையில் கருப்பையாவின் வீட்டின் மீது கல் எறிந்துள்ளார். கருப்பையா சக்திகணேஷை திட்டியுள்ளார். ஆத்திரத்தில் சக்திகணேஷ் வீட்டினுள் இருந்த அரிவாளை எடுத்து வந்து கருப்பையாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார்.
அப்போது அதே பகுதியில் வேறு ஒரு புகார் குறித்து விசாரணைக்கு சென்றிருந்த எஸ்.ஐ.,க்கள் பாரதிராஜன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் கொலை நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும் சக்திகணேஷ் கண்மாய்க்குள் தப்பியோடியுள்ளார். போலீசார் இருவரும் விரட்டிச் சென்று சக்திகணேஷை பிடித்தனர். திருப்புவனம் போலீசார்  விசாரிக்கின்றனர்.

