/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சங்கராபுரம் ஊராட்சி தேர்தல் வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
/
சங்கராபுரம் ஊராட்சி தேர்தல் வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
சங்கராபுரம் ஊராட்சி தேர்தல் வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
சங்கராபுரம் ஊராட்சி தேர்தல் வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
ADDED : நவ 23, 2024 02:37 AM
புதுடில்லி:சிவகங்கை மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி தலைவருக்கான தேர்தல், கடந்த 2020 டிசம்பரில் நடந்தது.பதிவான ஓட்டுகள் ஜன., 2021ல் எண்ணப்பட்டன. இதில், தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சில ஓட்டுகள் எண்ணப்படவில்லை என பிரியதர்ஷினி புகார் தெரிவித்ததை அடுத்து, ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டன. இதில், 63 ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்த தேர்தல் அதிகாரி, அதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார்.
இதை எதிர்த்து தேவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தேவியின் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக அவர் பதவியேற்றார்.
இந்த உத்தரவை எதிர்த்து பிரியதர்ஷினி தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. நீதிமன்றம், பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லும் என கடந்த அக்., 23ல் தீர்ப்பளித்தது. இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்றார்.
உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேவி சமீபத்தில் மனு செய்தார். மனு விசாரணை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், அரவிந்த் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக விளக்கமளிக்க தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பிரியதர்ஷினி, தமிழக தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை டிச. 16க்கு ஒத்திவைக்கப்பட்டது.